×

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது: உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது. இதை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சந்திரகிரி ஸ்ரீவாரி மிட்டா மற்றும் அலிபிரி மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்ரீவாரி மிட்டா பகுதியில் கடந்த வாரம் 6 வயது சிறுமி லக்‌ஷிதாவை சிறுத்தை கவ்விச்சென்று கொன்றது. இதனிடையே சிறுத்தைகளை பிடிக்க மலைப்பாதையில் கூண்டு வைக்கப்பட்டது. இதில் கடந்த 13ம் தேதி ஒரு சிறுத்தை லட்சுமி நரசிம்மர் சன்னதி பகுதியில் சிக்கியது. அதனை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை லட்சுமி நரசிம்மர் சன்னதி அருகே 3வதாக வைக்கப்பட்டிருந்த கூண்டில் மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது. இதனை வனத்துறையினர் மீட்டு திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

* ‘ஆபரேஷன் சிறுத்தை’ தொடரும்
திருப்பதி மலை பாதையில் கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தை பிடிபட்டது குறித்து அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் கூறியதாவது: திருப்பதி மலைபாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, 50 நாட்களில் 3 சிறுத்தைகள் பிடிபட்டது. 6 வயது சிறுமியை தாக்கி கொன்றதாக கூறப்படும் சிறுத்தையை கண்டுபிடிக்கும் வரை பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்து பிடிக்க ஆபரேஷன் சிறுத்தை தொடரும். திருப்பதி மலைபாதை மற்றும் நடைபாதைகளில் ஏற்கனவே 300 கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 200 கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படும் என்றார்.

The post திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது: உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumalai ,Tirapati ,Dinakaran ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...